search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்படுத்த வேண்டும்
    X

    துணிப்பையை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வெளியிட்டார்.

    சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்படுத்த வேண்டும்

    • குப்பை மேலாண்மைக்கு பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான்.
    • கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் துணிப்பை வழங்கும் விதமாக 'துணிப்பை தூக்க துணிவோம்' என்ற விழிப்புணர்வு இயக்கம் நகராட்சி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமை தாங்கினார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துணிப்பையை வெளியிட்டு பேசுகையில்:-

    தற்போது சுற்றுச்சூழலு க்கும், குப்பை மேலாண்மைக்கும் பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான், இதனால் நீர்நிலைகள், வடிகால், கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    இதன் பயன்பாட்டை தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை அதிகப்படுத்தவும், தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×