என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் ஒவ்வொரு மாதமும் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் குறித்த சிறப்பு முகாம்
- முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் குறைதீர் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்
- மதிப்பெண் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ், வங்கிக்கணக்கு முகப்பு புத்தக நகல், மகள்)வண்ணப்புகைப்படம்-2 ஆகிய சான்றுகளோடு கலந்து கொள்ளவும்.
தருமபுரி
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு கீழ் காணும் திட்டபணிகளை மேற்கொள்ள சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படும்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை இரசீதுகள் கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர்கீழ்கண்ட உரிய சான்றுகளோடு ஆஜராகி இச்சிறப்பு குறைதீர் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பதிவுசெய்து நாளது தேதி வரை வைப்புத்தொகை தொகை இரசீதுகள் கிடைக்கப்பெறாத பயனாளிகள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்த ஒப்புகை இரசீதுடன் கூடிய இணையவழி விண்ணப்பத்துடன் இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ளவும்.
இத்திட்டத்தில் பதிவு செய்து வைப்புத்தொகை ரசீது பெற்று 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகை கிடைக்க பெறாத பயனாளிகள் வைப்புத்தொகை இரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ், பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு முகப்பு புத்தக நகல், பயனாளியின்(தாய் மற்றும் மகள்)வண்ணப்புகைப்படம்-2 ஆகிய சான்றுகளோடு இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ளவும்.
மேலும் திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலக த்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.






