search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வில் சாதாரணவர்கள் கூட ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும்- முன்னாள் அமைச்சர் பேச்சு
    X

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

    அ.தி.மு.க.வில் சாதாரணவர்கள் கூட ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும்- முன்னாள் அமைச்சர் பேச்சு

    • தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கும் எடப்பாடி தான் அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு முழு தகுதியுடையவர்.
    • ஜனநாயக முறைப்படி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சை, ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி கழகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை தாங்கினார்.

    நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி தலைவரும் மருத்துவ கல்லூரி பகுதி முன்னாள் செயலாளருமான சரவணன் வரவேற்றார்.

    அம்மா பேரவை இணை செயலாளரும் மாவட்ட பால்வளத் தலைவருமான காந்தி, மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், திராவிடன் நகர கூட்டுறவு சங்க தலைவர் பஞ்சாபிகேசன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சிங். ஜெகதீசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் நாகராஜன், தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் குடந்தை மண்டல செயலாளர் திருநீலகண்டன், வல்லம் பேரூர் செயலாளர் சசிகுமார், மருத்துவக் கல்லூரி பகுதி அம்மா பேரவை செயலாளர் மனோகர், முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கனகராஜ், முன்னாள் கவுன்சிலர் பூபதி, மகளிர் அணி சித்ரா அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தப் பொது கூட்டத்தில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. காமராஜ் எம்.எல்.ஏ, கொள்கை பரப்பு துணை செயலாளரும் இலக்கிய அணி செயலாளருமான வைகை செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தான் அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க வர வேண்டும். அந்த வகையில் தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு முழு தகுதி உடையவர்.

    அண்ணா கற்று கொடுத்த ஜனநாயக முறைப்படி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

    அதில் ஒற்றை தலைமை வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர்.

    அனைவரின் விருப்பப்படியும் ஜனநாயக முறைப்படியும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் சாதாரணவர்கள் கூட எம்.பி, எம்.எல்.ஏ .ஆகவும், ஆட்சி அதிகாரத்திற்கும் வர முடியும். அதற்கு நானே ஒரு உதாரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன் பேசும்போது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சோதனைகளை எல்லாம் தாங்கி 4 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தினார்.

    விரைவில் அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றார்.

    இந்த கூட்டத்தில், தலைமை பேச்சாளர் ரத்தினவேல், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மருதராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூவை செழியன், சி.வி. சேகர், கோவிந்தராஜன், ரத்தினசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், திருவையாறு வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மருத்துவர் அணி தங்க கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கணபதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் தம்பிதுரை, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்ற ரெத்தின சோமசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பாலை ரவி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் முருகேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் வீரராஜ், அ.தி.மு.க. பிரதிநிதி மோகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், மாணவரணி முருகேசன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி வாஞ்சிநாதன், கவுன்சிலர்கள் கோபால், கேசவன், காந்திமதி நவநீதகிருஷ்ணன், கலைவாணி சிவகுமார், தெட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×