என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி தேவையா? என்பது குறித்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்று ஜி.கே.வாசன் பேசினார்.
    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம் பட்டியில் ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 மாவட்ட த.மா.கா. கட்சி மண்டல ஆலோசனை கூட்டம் நடந்தது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலில் தோற்றாலும் எங்கள் கட்சி வலுவாகத்தான் உள்ளது. வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு தான் இருக்கிறது. மேலும் கட்சியின் தொடர் செயல்பாடுகள் குறித்து மண்டல கூட்டங்கள் நடத்தி கொண்டு இருக்கிறோம்.

    ஈரோட்டில் நடப்பது 6-வது மண்டல கூட்டம் ஆகும். இன்னும் 6 மண்டல கூட்டங்கள் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தின் நோக்கம் தொடர்ந்து தொய்வில்லாமல் பணியாற்றி கட்சியை மேலும் வளர்ச்சி பாதையில் செல்ல வைப்பதற்கு தான் இந்த கூட்டம் வட்டார, நகர, உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளிக்கும்.

    அனைத்து நகர கிராமங்களிலும் த.மா.கா.வுக்கு மக்கள் மத்தியில் பெயர், செல்வாக்கு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி தேவையா? என்பது குறித்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவு செய்யப்படும்.

    சட்டசபை தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். கட்சி தொண்டர்கள் த.மா.கா.வுக்கு தூண்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
    வெள்ளோடு அருகே வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    வெள்ளோடு அருகே உள்ள பி மேட்டுப்பாளையம் காலனி என்ற இடத்தை சேர்ந்தவர் தொழிலாளி செல்லமுத்து (வயது 60).

    இவர் நேற்று காலை அங்குள்ள வாய்க்கால் மேடு வழியாக நடந்து சென்றார்.

    அப்போது அவர் கால் தவறி வாய்க்காலுக்குள் விழுந்துவிட்டார். இதில் தலையில் பலத்த அடிபட்ட செல்லமுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் நடைபெற்ற த.மா.கா. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு திண்டலில் ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 மாவட்ட த.மா.கா. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அடுத்து உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைபாடு பற்றி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்து மண்டல அளவில் கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்த உள்ளோம். இதற்காகத்தான் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தோம்.

    விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை எந்தவித குளறுபடியும் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். கண்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்ட 570 கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது, வர வேற்கத்தக்கது. விரைவில் விசாரணை நடத்தி தெரிவிக்க வேண்டும்.

    கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் யுவராஜ், பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநிலதுணைத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 51.23 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1327 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. 42 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 50 அடியை தொட்டது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் இந்த நீர்மட்டம் உயர்ந்தது.

    தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தாலும் நீலகிரி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் நீர்வரத்து மேலும் இன்று காலை 8 மணி முதல் அதிகரித்து உள்ளது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.23 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1327 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வாய்க்காலில் பாசனத்துக்கு 100 கன அடி தண்ணீரும், ஆற்றுக்கு குடிநீருக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
    ஆக்கிரமிப்பை அகற்ற அவகாசம் கொடுங்கள் என்று பெரும்பள்ளம் ஓடைபகுதி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு, பெரும்பள்ளம் ஓடையை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் நஞ்சைஊத்துக்குளி வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையொட்டி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இதுவரை 571 வீடுகள் அகற்றப்பட்டது.

    இதேபோல் பெரும்பள்ளம் ஓடையை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. வரும் 15-ந் தேதிக்குள் காலிசெய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதில் ஒருசிலர் தாங்களாகவே முன்வந்து வீடுகளை காலிசெய்தனர்.

    இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலககத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத் தில் கலந்து கொண்ட பெரும்பள்ளம் ஓடை பகுதி மக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

    ஆக்கிரமிப்பை அகற்ற எங்களுக்கு போதிய அவகாசம் கொடுங்கள் இந்த வீடுகளுக்கு பதில் எங்களுக்கு மாற்று இடம் கொடுங்கள்.. அந்த இடம் ஈரோடு பகுதிக்குள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி இருந்தனர்.

    கட்சிக்கு துரோகம் செய்தால் பூஜ்யமாகி விடுவார்கள் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் ஆவேசமாக பேசியுள்ளார்.

    கோபி:

    கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:–

    வரும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றி கனியை முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதிமுக வேட்பாளருக்கு துரோகம் செய்து யார் எதிர்த்து நின்றாலும் அவர்கள் கட்சியை விட்டு 10 ஆண்டு காலத்திற்கு நீக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் கட்சியில் பூஜ்யமாகி விடுவார்கள்.

    நாம் இந்த அளவிற்கு பதவி உயர்விற்கு காரணமே முதல்வர் ஜெயலலிதாதான். அவர் 24 மணி நேரமும் தொணடர்களுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு அவர்தான் முதல்வர்.

    தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி அனைத்து தரப்பினருமே பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக சொல்லப்போனால், ஈ, எறும்பு வரை இன்னும் பல ஜீவராசிகள் முதல்வரின் திட்டத்தினால் பயனடைந்துள்ளன. 6-வது முறையாக தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முத்தான 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டதின் மூலம் தமிழக மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்று விட்டார். எனவே அதிமுக தொண்டர்கள் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் வீடு வீடாக எடுத்துச் சொல்லி 100 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டி தொடர்ந்து நிரம்பி வருவதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரட்டை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் இரண்டொரு நாளில் அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 50.81 அடியாக இருந்தது.
    ×