என் மலர்
செய்திகள்

ஜி.கே.வாசன் பேட்டி அளித்தபோது எடுத்தபடம்.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?: ஜி.கே.வாசன் பேட்டி
ஈரோட்டில் நடைபெற்ற த.மா.கா. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு திண்டலில் ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 மாவட்ட த.மா.கா. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அடுத்து உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைபாடு பற்றி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்து மண்டல அளவில் கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்த உள்ளோம். இதற்காகத்தான் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தோம்.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை எந்தவித குளறுபடியும் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். கண்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்ட 570 கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது, வர வேற்கத்தக்கது. விரைவில் விசாரணை நடத்தி தெரிவிக்க வேண்டும்.
கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் யுவராஜ், பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநிலதுணைத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story