என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஜெயலலிதா மரணம் பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் அவரை பற்றி கொச்சைப்படுத்தவோ வீண் புரளியை பரப்பவோ வேண்டாம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று ஈரோடு வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சோ ஆகியோர் மறைவுக்கு காங்கிரசார் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப் பட்டதினால் விவசாயிகள், வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை இன்னும் 50 நாளில் சரியாகி விடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். ஆனால் நிதி மந்திரி அருண் ஜெட்லி 6 மாதம் ஆகும் என்கிறார்.

    இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து அனைத்து தரப்பினரையும் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான உரிய விலையை தேர்தலின் போது பா. ஜனதா சந்திக்கும்.

    வறட்சியால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து உள்ளனர். எனவே அவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஏற்கனவே 2 முறை இடைக்கால முதல்வராக பணியாற்றி உள்ளார். இப்போது முதன் முறையாக முழுமையான முதல்- அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். எனவே அவர் மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல் படுத்துவதுடன் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மின் உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பதுடன் சட்டம்-ஒழுங்கையும் பாதுகாக்கும் அரசாக இருக்க வேண்டும். லஞ்சம்-ஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வேகமாக செயல்பட வேண்டும்.

    காமராஜர், எம்.ஜி.ஆர் ஆகியோர் வாழ்ந்த வீடுகளை நினைவு இல்லமாக ஆக்கியது போல ஜெயலலிதா வாழ்ந்த வீட்டையும் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். மக்களுக்காகவே நான்.. என்று மக்களுக்காக வாழ்ந்த அவரது வீட்டை நினைவு இல்லமாக ஆக்குவதுடன் அவர் நடித்தபோது பெற்ற பரிசுகள் முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் பெற்ற பரிசுகள் போன்றவற்றை நினைவிடத்தில் வைத்து, எதிர்காலத்தில் அவரை பற்றி பொதுமக்கள் அறியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. உடையும் என்று சுப்பிரமணியசாமி சொல்லி இருப்பது அவரது சொந்த கருத்து மேலும் அது பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக யார் வருவார்? என்பது அவர்களது உள்கட்சி பிரச்சினை.

    ஒரு வாரம் ஜெயலலிதா மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதன் பிறகு அந்த கட்சி செயற்குழு, பொதுக்குழு கூடி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள். நான் அ.தி.மு.கவினால் வளர்க்கப்பட்டவன். அந்த கட்சியை வளர்க்கவும் பாடு பட்டு உள்ளேன். எனவே சுப்பிரமணியசாமி கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

    பாரதீய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த கட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட்டணி பற்றியோ கூட்டணி தலைவர்களை சந்திப்பதற்கோ தமிழகம் வரவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை சந்திப்பதற்கு ஒரு முறையும், இப்போது அவர் இறந்ததற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும்தான் வந்துள்ளார். எனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் இல்லாமல் அனுமதிக்கப்பட்டபோது பார்க்கவில்லை என்று கூறுவது தவறான கருத்தாகும்.

    காங்கிரசில் கோஷ்டி என்பது இல்லை. காங்கிரசில் உள்ள எல்லா தலைவர்களும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக செயல்படுகிறோம். தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்னுடன் விவாதம் நடத்த தயாரா? என்று கேட்டுள்ளார். அவர் முதலில் தந்தையான காங்கிரசில் இருக்கும் குமரி ஆனந்தனிடம் விவாதம் அளித்து விட்டு பிறகு என்னுடன் விவாதம் நடத்த வரலாம்.

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன்தான் கூட்டணி பற்றி பேச்சு நடத்துவோம்.

    ஜெயலலிதா மரணம் பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது.

    இந்த வி‌ஷயத்தில் அவரை பற்றி கொச்சைப்படுத்தவோ வீண் புரளியை பரப்பவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

    முன்னதாக ரெயில் மூலம் ஈரோடு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுக்கு ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா ரவி, வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ ஆ£ எம் பழனிச்சாமி, பள்ளி பாளையம் பி.டி. தனகோபால், திருப்பூர் புறநகாமாவட்ட முன்னாள் பொறுப்பாளா தென்னரசு, வக்கீல் வி.என்.சுப்பிரமணியம், முத்துக்குமார், மொடக்குறிச்சி மோகன் குமார மங்கலம், சேலம் மேகநாதன், சேலம் மாநகா மாவட்ட தலைவர் மேகநாதன், வேலம்பாளையம் கிழக்கு மாவட்ட தலைவா பொயசாமி, விவசாய அணி மாநில பொது செயலாளா மக்கள் ராஜன், கிரி ரவிச்சந்திரன் மற்றும் பலர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    100 ஆண்டு பழமை வாய்ந்த வெள்ளோடு சுயம்பு மாரியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று காலை தொடங்கியது.
    சென்னிமலை அடுத்துள்ள வெள்ளோட்டில் 100 ஆண்டுள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29-ம் தேதி இரவு கோவிலின் முன்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் அதிகாலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.

    மேலும் அம்மனுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று காலை தொடங்கியது.

    காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவிலை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாரியம்மனுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நடு இரவு கம்பம் பிடுங்கினர். இன்று மாலை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
    ஈரோடு மாவட்டத்தில் ஜெயலலிதா மறைவு செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த பெண் அதிர்ச்சியில் உயிரிழந்தார்

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டியை சேர்ந்தவர் கந்தாயி (வயது 61). மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழக அரசின் முதியோர் பென்சன் பணம் பெற்று வந்தார்.

    ஜெயலலிதா மறைவு செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். அவரது இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்த கந்தாயி மிகவும் வேதனை அடைந்தார்.

    டி.வி.செய்தியை பார்க்க.. பார்க்க கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தார்.

    பிறகு அதிர்ச்சியில் மூர்ச்சையற்று கந்தாயி மயங்கி சாய்ந்தார். அதே இடத்தில் அவர் இறந்தார்.

    “முதல்வர் அம்மா எனக்கு முதியோருக்கான பணம் கொடுத்து வந்தாரே இனி யார் தரப் போகிறார்கள்” என்று கூறி கொண்டே அதிர்ச்சியில் அவர் இறந்து விட்டார்.

    இவருடன் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 7பேர் இறந்துள்ளனர்.

    2 நாட்களுக்குப்பிறகு தமிழகத்தில் கர்நாடக பஸ்கள் மீண்டும் இயக்கம் ஈரோடு-கோவை வந்தது ஈரோடு_01
    ஈரோடு:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி நேற்றும், நேற்று முன்தினமும் கர்நாடக பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்படவில்லை.

    இதனால் பெங்களூர், மைசூர் மற்றும் கொள்ளே காலிலிருந்து கோவை, சத்தியமங்கலம், ஈரோடு வரும் கர்நாடகா மாநில பஸ்கள் வரவில்லை.

    ஒரு சில பஸ்கள் மட்டும் தமிழக எல்லையான தாளவாடி வரை வந்து விட்டு சென்றது. ஆனால் அந்த பஸ்களில் கூட்டம் இல்லை.

    2 நாட்களுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) முதல் முழுமையாக கர்நாடக மாநில பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டன.

    நேற்று மாலை முதல் ஒன்றிரண்டு பஸ்கள் இயங்கினாலும் இன்று காலை முதல் தான் முழுமையாக கர்நாடக மாநில பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டது. இன்று வந்த கர்டநாடக பஸ்களில் வழக்கம் போல் கூட்டம் காணப்பட்டது.

    சத்தியமங்கலத்தில் டயரை ஏற்ற பஸ்சில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    சத்தியமங்கலத்தில் உள்ள ஜல்லி குழி என்ற இடத்தை சேர்ந்தவர் முத்து (வயது 44). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த ஒருதனியார் பஸ்சின் மேல் டயரை ஏற்றி கொண்டு இருந்தார்.

    இதற்காக முத்து பஸ்சின் பின்புறம் உள்ள ஏணிப்படி வழியாக ஏறினார். அப்போது மழை தூறி கொண்டு இருந்தது. இதனால் கால் வழுக்கிய அவர் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த அடிபட்ட முத்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டடார். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த முத்துவுக்கு கலாமணி என்ற மனைவியும் மேகலா (19), நிவேதா (18) என்ற 2 மகளும் உள்ளனர். இவர்கள் முத்துவின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
    ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி அவரை பாராட்டி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதில் உள்ள வாசகங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    கோபி:

    தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் கோபியில் நகர தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி அவரை பாராட்டி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் உள்ள வாசகங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் உள்ள வாசகங்கள்:-

    ‘‘எதிரியாக இருந்தாலும் எதிரில் நிற்பது சிங்கம் என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்... நீங்கள் ஆளக்கூடாது என்று தானே நினைத்தோம்... வாழக் கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே தாயே... இனி எங்கே காண்போம்... இதுபோன்ற பெருமை கொண்ட பேரூயிரே!!

    இந்த வாசகங்களுடன் ஜெயலலிதா உருவப் படமும் இடம் பெற்றிருந்தது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்ட அதிர்ச்சியில் ஈரோடு அ.தி.மு.க.பிரமுகர்கள் 3பேர் அதிர்ச்சியில் சாவு

    ஈரோடு:

    முதல் அமைச்சா ஜெயலலிதா கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ராஜ் என்ற அ.தி.மு.க. தொண்டர் நேற்று திடீர் என்று இறந்தார்.

    இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த அ.தி. மு.க. பிரமுகர் ஒருவரும் ஜெயலலிதா இறந்த அதிர்ச்சியில் இறந்து போனார். ஈரோடு திருநகா காலனி மாதவ காடு என்ற இடத்தை சேர்ந்த இவரது பெயர் எம்.ஜி.ஆர். தாசன் என்ற சிதம்பரம் (வயது 48).

    35 வருடமாக அ.தி.மு.க. வில் இருந்த இவர் 13-வது வார்டு வட்ட செயலாளராகவும் இருந்தார். ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமாக அறிந்ததில் இருந்தே எம்.ஜி.ஆர். தாசன் சோகமாக அழுது கொண்டே இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று ஜெயலலிதா இறந்ததை கேள்விப்பட்டதும் இவர் “புரட்சி தலைவி அம்மா” என்று கதறி அழுதபடியே அதிர்ச்சியில் சுருண்டு விழுந்தார்.

    மயக்க நிலையில் இருந்த அவரை உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவே எம்.ஜி.ஆர்.தாசன் இறந்து போனார்,

    இவருக்கு மகேஷ்வா என்ற மனைவியும், நீதி மொழி, சிவரஞ்சனி, நீதியரசி என்ற 3 மகள்களும், பேரழகன் என்ற மகனும் உள்ளனர். இவரது உடலுக்கு ஏரளானமான அ.தி.மு.க.வினா அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் மற்றொரு அ.தி.மு.க பிரமுகர் அதிர்ச்சியில் இறந்துள்ளார்.

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் ஊராட்சி கழக செயலாளராக இருந்தவர் கதிர்வேல் (47). அரிசி வியாபாரம் பார்த்து வந்தார். எழுமாத்தூர் மண் கரடு வண்ணான் பாறையில் வசித்து வந்தார்.

    1990 முதல் மண்கரடு அ.தி.மு.க கிளை செயலாளராகவும் 1996 முதல் தற்போது வரை எழுமாத்தூர் ஊராட்சி செயலாளராகவும் இருந்தார்.

    முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்பலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது முதல் கதிர்வேல் சோகமாக காணப்பட்டார்.

    முதல்வர் குணமாக வேண்டி பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொண்டார்.

    முதல்வருக்கு மாரடைப்பு மிகவும் கவலைக்கிடம் என்ற செய்தியை கேட்டதும். கதறி.. கதறி அழுதார். அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறினர். நேற்று வேதனையின் தூங்கியவர் அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.

    இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் கட்சி பிரமுகர்கள் முதல்வர் படம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த ஊராட்சி செயலாளர் கதிர்வேல் வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில் அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.

    இறந்த கதிர்வேலுவுக்கு சாரதாம்பாள் என்ற மனைவியும் ராகுல்குமார் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    நசியனூர் 15-வது வார்டு பகுதியில் வசித்து வந்த அ.தி.மு.க. பிரமுகர் சின்னசாமி (வயது 60). தீவிர அ.தி. மு.க. தொண்டராக இருந்து வந்தார்.

    இன்று காலையில் இருந்து முதல்வர் ஜெய லலிதா மரணம் அடைந்ததையொட்டி மிகவும் வேதனையில் இருந்த அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந் தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு அருகே இன்று நடக்க இருந்த மைனர் பெண் திருமணம் அதிகாரிகள் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு, ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகள் மகள் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கு 17 வயது தான் ஆகிறது.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பூமாலை(29) என்னும் தொழிலாளிக்கு காளியப்பன் தனது மகளை திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் நடந்தது.

    இன்று கொடுமுடி கோவிலில் திருமணம் நடத்த இருவீட்டு பெற்றோர்களும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஈரோடு சமூக நலவிரிவு அலுவலர் வல்லவி ராணி தலைமையில் அதிகாரிகள் இரு வீட்டு பெற்றோர்களை அழைத்து பேசினார்கள்.

    அப்போது மைனர் பெண்ணை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என்று எடுத்து கூறினர். மீறி திருமணம் செய்தால் கைது செய்ய சட்டத்தில் வழிவகை உண்டு என்று எச்சரித்தனர்.

    இதனை ஏற்று இருவீட்டு பெற்றோர்களும் திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதனால் இருவீட்டு உறவினர்களும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினார்கள்.
    ஈரோடு அருகே வீடுகட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி இளநிலை பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம், சின்னப்பகவுண்டர் வீதியை சேர்ந்தவர் நல்லசாமி(வயது 70). இவர் சொந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்தார்.

    இதற்கான வரைபடத்திற்கு அனுமதி பெற ஈரோடு மாநகராட்சி நகரமைப்பு அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதற்கு லஞ்சமாக ரூ.40 ஆயிரம் வாங்கியதாக நகரமைப்பு இளநிலை பொறியாளர் பிரேம்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பிரேம்குமாரை கைது செய்தனர். இதையெடுத்து பிரேம்குமார் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றுபடுகையில் மழை தண்ணீருடன் சாயக்கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    சென்னிமலை:

    நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளை யத்தில் ஈரோடு, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற 1996-ம் ஆண்டு 423 ஹெக்டரில் 40 அடி கொள்ளளவில் அணை கட்டப்பட்டது.

    தற்போது திருப்பூர் பகுதியில் செயல்படும் பின்னலாடை சாய கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்பட்டாதால் அணை நீர் பயன்படாமல் போய்விட்டது

    அணை பகுதியில் உள்ள நிலங்களும் கெட்டுவிட்டது. அணையை திறந்தே வைப்பதால் அணைக்கு வரும் நீர் வெளியேற்ற படுவதால் அணை பகுதி எப்போதும் வரண்டு தான் காணப்படும்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வெள்ளியங்கிரி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் கொஞ்சம் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மழை வெள்ளம் இருந்தாலும் அணையில் தற்போது தேங்கி நிற்கும் தண்ணீர் சாய கழிவு நீர் போல் தான் காட்சி அளிக்கிறது.

    மேலும் தற்போது நொய்யல் நதியில் வரும் தண்ணீரில் சாயக்கழிவு கலந்து தான் வருகிறது. இது நொய்யல் ஆற்றுப்படுகை விவசாயிகளுக்கு பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பகுதியில் பின்னலாடை சாயப்பட்டறை களில் கழிவுநீரை சுத்தம் செய்துகூட வெளியேற்ற கூடாது என மாசுகட்டு பாட்டு வாரியத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூரிலும் கடுமையாக அதிகாரிகள் சோதனை நடத்தி பல சாயப்பட்டறைகளை மூடிவிட்டனர். எனினும் தற்போது வந்துள்ள மழை நீருடன் சாயக்கழிவு நீர் கலந்து தான் நொய்யல் ஆற்றில் ஓடுகிறது.

    இது காவேரியில் வேறு கலப்பதால் கரூர், நாமக்கல், திருச்சி மாவட்ட மக்களும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
    கர்நாடக அரசு என்ஜினீயர்களிடம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் ஈரோடு வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டதா? என்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசு என்ஜினீயர்கள் 2 பேர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் 2 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது பெங்களூருவில் பிரபல கட்டுமான ஒப்பந்ததாரராக இருக்கும் ஈரோட்டை சேர்ந்த என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திலும் சோதனை நடந்தது.

    ஒட்டுமொத்தமாக நடந்த இந்த சோதனையில் ரூ.6 கோடி ரொக்கம் மற்றும் 11 கிலோ தங்கம் கணக்கில் வராமல் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட ரூ.6 கோடியில் ரூ.5¾ கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தன? என்பது பற்றி அவர்களிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது பெங்களூரு மட்டுமின்றி ஈரோட்டிலும் வங்கிகள் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் பெற்ற விவரம் தெரியவந்தது. பெங்களூருவில் பணம் மாற்றிக்கொடுத்த ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தபோது, ஈரோட்டில் 3 பேருக்கு பணம் மாற்றிக்கொடுத்ததில் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் நடந்த பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது வங்கியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி வங்கி உயர்அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஈரோடு மாவட்டத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நவம்பர் 10-ந்தேதி முதல் வழங்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய் நோட்டும் யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்று எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு உள்ளது. தனியார் வங்கிகளில் இதில் என்ன நடைமுறை கடைபிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை. வருமானவரித் துறையினரின் விசாரணை முடிவுக்கு பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்” என்றார்.

    ஈரோடு பழையபாளையம் கற்பக விநாயகர் கோவிலில் 5-ந் தேதி காலை 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
    ஈரோடு பழையபாளையம் பிரிவு பாரிநகரில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சீரமைக்கப்பட்டது.

    இதை யொட்டி இன்று (சனிக்கிழமை) கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. மாலை முதற் கால பூஜை, வாஸ்து சாந்தி, பூமி தேவி பூஜை நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் கால பூஜை, கணபதி பூஜை, 3-ம் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    வரும் 5-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை கணபதி பூஜை, புண்யாகம், தீபாராதனை, கலசங்கள் கோவில் வலம் வரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து காலை 7 மணிக்குள் கற்பக விநாயகர் கோபுர மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    மேலும் கருவறை தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    ×