என் மலர்tooltip icon

    ஈரோடு

    சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன் கூட்டியே இப்போதே ஏராளமான பக்தர்கள் தடுப்பு கம்புகள் இடையே காத்திருக்கிறார்கள்.
    சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க பண்ணாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி பூச்சாட்டும் நிகழ்ச்சியுடன்குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி பண்ணாரிஅம்மன் உற்சவர் சப்பரத்தில் திருவீதிஉலா வந்தது. பண்ணாரி மற்றும் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஊர்களில் அம்மன் திருவீதி உலா வந்தது. ஒவ்வொரு ஊரிலும் திரளான பக்தர்கள் கூடி அம்மனை வழிபட்டனர்.

    நேற்று நள்ளிரவு அம்மன் மீண்டும் கோவிலை அடைந்தது. இதையொட்டி கோவிலில் கம்பம் சாட்டப்பட்டது.

    வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் குண்டம் விழா அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. தலைமை பூசாரி அம்மன் சப்பரத்தை தலையில் சுமந்து முதலில் குண்டம் இறங்கி தீ மிதிக்கிறார். இதை தொடர்ந்து 5 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தீமிதிக்கிறார்கள்.

    ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் என மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதிக்கிறார்கள்.

    குண்டம் விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதி வழியாக பல பக்தர்கள் நடைபயணமாகவும், மாட்டு வண்டிகள் மூலமாகவும் கோவிலுக்கு வருவதையொட்டி யானை, கரடி, காட்டெருமை உள்பட வன விலங்குகளின் அபாயத்தில் சிக்காமல் இருக்க வனத்துறையினரும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    குண்டம் விழாவுக்குஒரு வாரத்துக்கு முன் கூட்டியே இப்போதே ஏராளமான பக்தர்கள் தடுப்பு கம்புகள் இடையே காத்திருக்கிறார்கள்.

    வெளியூர் பக்தர்களான இவர்கள் குடும்பத்துடன் இடம்பிடித்து காத்திருக்கும் இடங்களிலேயே சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்துக்கொள்கிறார்கள்.
    வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஈரோடு:

    பவானியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக விவசாயிகளை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் நிலவி வரும் வறட்சிக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.40 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிவாரணம் ஒதுக்கி உள்ளது.

    தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.



    டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    நாளை முதல் நடக்க உள்ள இந்த தொடர் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவிக்கும். இதேபோல் வரும் 17-ந்தேதி முதல் மாவட்ட தலை நகரங்களில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடக்கும் கால வரையற்ற போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கிறது.

    இவ்வாறு முத்தரசன் கூறினார்.

    அப்போது மாநில பொருளாளர் ஆறுமுகம், நிர்வாக குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஈரோடு அருகே ஒரு நாள் முழுவதும் 2 மதுக்கடைகளை திறக்க விடாமல் பெண்கள் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு மாற்று இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மற்ற கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும் நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளில் மது குடித்து வந்த குடிமகன்கள் தற்போது அருகே உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மொய்த்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த கடைகளில் ‘‘குடி’’ மகன்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள 3 மதுக்கடைகள் மூடப்பட்டன.

    இதனால் சரக்கு கிடைக்காமல் தவித்துப் போன குடிமகன்கள் கவுந்தப்பாடி அருகே உள்ள உப்புக்காரபள்ளம், பி.மேட்டுப்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுகடைக்கு அலை மோதிய வண்ணம் உள்ளனர்.

    இதனால் அந்த கடைகளில் நீண்ட வரிசையில் குடிமகன்கள் காத்திருந்து மதுபானம் வாங்குகிறார்கள். மேலும் அவர்களிடையே சரக்கு வாங்க கடும் போட்டி ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.

    மேலும் சில குடிமகன்கள் குடித்து விட்டு போதையில் அப்பகுதியில் நடமாடுகிறார்கள். அங்கு நடந்து செல்லும் பெண்களிடம் பல்லை காட்டி கிண்டல் செய்வதாகவும் பரபரப்பு புகார் கூறப்பட்டது.

    இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் உப்புக்காரபள்ளம், பி.மேட்டுப்பாளையம் டாஸ்மாக் மதுகடை முன் குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுக்கடைகளை திறக்க விடமாட்டோம் என கடைகள் முன் உட்கார்ந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம்போல் கடைகளை திறக்க வந்த ஊழியர்கள் பெண்கள் போராட்டத்தையொட்டி அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் டாஸ்மாக் மடண்டல மேலாளர் ஜெயச் சந்திரன், மாவட்ட மேலாளர் யாகூப் மற்றும் கவுந்தப்பாடி போலீசார் விரைந்து வந்தனர். போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பெண்கள் ‘‘இந்த மதுக்கடைகளால் எங்களுக்கு பல தொல்லைகள் ஏற்படுகிறது. ரோட்டில் கூட நடமாட முடியவில்லை. இந்த கடைகளை கண்டிப்பாக திறக்க விடமாட்டோம்’’ என்று கூறினர்.

    போராட்டம் நீடித்துக் கொண்டே போனதால் பெண்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். இதையொட்டி அந்த 2 கடைகளும் மூடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். அதன் பிறகுதான் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அந்த கடைகளுக்கு சரக்கு வாங்க வந்த குடிமகன்கள் மதுக்கடை முன் பெண்கள் ஆவேசத்துடன் போராடி கொண்டிருந்ததை கண்டு அங்கிருந்து ‘ஜகா’ வாங்கினர்.

    சில குடிமகன்கள் ‘‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...’’ என்று கூறி விட்டு சரக்கு வாங்க முடியாமல் வேறு கடையை நோக்கி புறப்பட்டனர்.
    ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பு இல்லை என தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்தார்.
    ஈரோடு:

    தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு பாடமுறை தமிழக பாட திட்டத்துக்கு எதிர்மாறாக உள்ளது. மேலும் இந்த பாட திட்டம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளது. மாணவர்களை பாதிக்கும் இந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகள் முன்பும் த.மா.கா. இளைஞர் காங்கிரஸ் சார்பில் வரும் 7-ந் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.

    மாணவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்க வேண்டும். தமிழக மாவட்ட தலை நகரங்களில் கல்வி கடன் முகாம்கள் நடத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி 50 சதவீத மது கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வேறு இடங்களில் புதிய கடைகளை திறக்க கூடாது.

    தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் த.மா.கா. சார்பில் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வரும் 11-ந் தேதி முதல் வாரம் இரு முறை பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.

    கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற விவசாய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

    ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. ஒருதலை பட்சமாக தேர்தல் நடக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். லாரி ஸ்டிரைக் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    பெண்களுடன் உல்லாசமாக இருக்க வாலிபரை அழைத்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பிச்சாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கார்த்தி நேற்றுஇரவு வெட்டுக்காட்டு வலசு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் கார்த்தியிடம் சென்று “எங்கள் வீட்டில் இரண்டு பெண்கள் உள்ளனர். அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம்” என்றனர்.

    பின்னர் ஒரு காரில் கார்த்தியை ஏற்றி கொண்டு சென்றனர். இதற்கிடையே கார்த்தி இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசியதகவல் கொடுத்தார்.

    வெட்டுக்காட்டு வலசு அடுத்த நாளித்தோட்டம் என்ற இடத்தில் வீட்டில் கார் நின்றது. அங்கு 2 பெண்கள் இருந்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும், ஒருபுரோக்கரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட புரோக்கர் மதுரை மாவட்டம் கெட்டாரம் பகுதியை சேர்ந்த கணேசன் (24) என தெரியவந்தது. மற்ற இருவர்கள் போலீஸ் வருதற்கு முன் வெளியே சென்று விட்டதால் தப்பினர்.

    விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கோயம்புத்தூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டடனர்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று சரக்கு வாங்கும் குடிமகன்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.
    ஈரோடு:

    நெடுஞ்சாலையோரம் உள்ள மது கடைகளை மூட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டதையொட்டி பல கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல டாஸ்மாக் மதுபானக் கடைகள் அகற்றப்பட்டன.

    ஈரோடு நகரில் ரெயில் நிலைய ரோட்டில்மட்டும் 4 மதுக்கடைகள் இருந்தது. தற்போது இந்த 4 மதுக் கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த 4 மதுக்கடைகளும் எப்போதும் ‘குடி’ மகன்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் இப்போது அந்த கடைகள் மூடப்பட்டு உள்ளதால் வேறுகடை எங்கு உள்ளது? என்று குடிமகன்கள் தவித்தார்கள்.

    நகரில் ஆங்காங்கே உள்ள மதுகடைகளில் இதனால் கூட்டம் அலைமோதியது. ரேசன் கடை மற்றும் சினிமா தியேட்டர்களில் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டு எடுப்பதுபோல் நீண்ட வரிசையில் காத்திருந்து சரக்குகளை வாங்கி குடித்தனர்.

    இதேபோல் டாஸ்மாக் பார்களிலும் டம்ளர், நொருக்கு தீனி வாங்க குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து வாங்கினர். இதேபோல் ஈரோடு நாச்சியப்பா 2-வது வீதியில் உள்ள 2 மதுக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த மதுக்கடைகளையொட்டி பூக்கடைகள் இருப்பதால் பெண்கள் வர அச்சப்பட்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

    குடிமகன்கள் கூட்டம் அதிகமானதால் போலீசார் அவர்களை வரிசையில் நிற்க சொன்னார்கள். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கவும் குடிமகன்களிடையே மோதல் ஏற்படாமல் இருக்கவம் பாதுகாப்பும் கொடுத்தனர்.

    கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் சரக்குகள் தீர்ந்ததால் உடனடியாக மக்கள் தாகத்தை போக்க லாரிகளில் குடிதண்ணீர் வருவதுபோல் குடோனில் இருந்து லாரிகளில் உடனடியாக சரக்குகள் அந்தந்த கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது. இதனால் குடிமகன்களின் தாகமும் தீர்ந்தது.

    முன்பு கடையில் காத்திருக்காமல் பணத்தை கொடுத்து உடனே மதுபானத்தை வாங்கி செல்லும் குடிமகன்கள் இப்போது வரிசையில் காத்திருப்பதால் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    வரிசையில் காத்திருந்த குடிமகன்களில் சிலர் கூறும்போது, ‘‘ரேசன் கார்டுகளில் பொருட்கள் வழங்குவதுபோல் எங்களுக்கும் அதேபோல் ஒரு கார்டு கொடுக்க வேண்டும். அதுவும் தற்போது ரேசன் கார்டுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கிறார்கள். அதேபோல் எங்களுக்கும் ‘ஸ்மார்ட் கார்டு’ கொடுக்க வேண்டும். அதை வைத்து நாங்கள் சரக்கு வாங்கி கொள்வோம். மேலும் ஒரு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மற்றொரு பகுதியை சேர்ந்தவர்கள் வரக்கூடாது. அவர்களுக்குரிய மதுகடையில் தான் வாங்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் மதுபானங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்‘‘ என்று கூறினர்.
    அம்மாபோட்டை அருகே சொகுசு பஸ் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 45 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    ஈரோடு:

    கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருப்பதிக்கு ஒரு சொகுசு (ஏ.சி) பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த சொகுசு பஸ்சில் திருச்சூர் பகுதியை சேர்ந்த 45 பயணிகள் இருந்தனர்.

    பஸ்சை கெத்து (வயது 25) என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார். இந்த பஸ் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பஸ்சின் பின்புறத்தில் இருந்து குபு...குபுவென புகை வெளியேறியது.

    ஏதோ எரியும் வாடை வருகிறதே.. என்று டிரைவர் திரும்பி பார்த்தார். அப்போது பஸ்சில் புகை வருவதை கண்ட அவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். தூக்கத்தில் இருந்த பயணிகளை சத்தம் போட்டு எழுப்பினார்.

    அதற்குள் பஸ்சின் பின்பகுதி தீ பிடித்து எரிந்தது இதை கண்ட பயணிகள் உடனே பஸ்சை விட்டு இறங்கினர். உடனடியாக இறங்க முடியாததால் பஸ்சின் இரு பக்க கண்ணாடியையும் உடைத்து கீழே குதித்தனர். 45 பயணிகளும் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பஸ் தீ பிடித்து எரிந்ததை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் மற்றும் அப்பகுதி மக்களும் பஸ் பயணிகளுக்கு உதவி செய்தனர்.

    பொதுமக்கள் மற்றும் பயணிகளால் உடனடியாக பஸ்சில் எரிந்த தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரியும் பஸ்சை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். எனினும் பஸ்சின் பின்பகுதி முழுவதும் எரிந்து சேதம் ஆனது.

    சொகுசு பஸ் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஸ்சில் வந்த கேரள சுற்றுலா பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
    பவானிசாகர் அருகே மனைவியிடம் அடிக்கடி பேசியதால் இளநீர் வியாபாரியை வெட்டி கொலை செய்த கொலையாளி போலீசில் சரண் அடைந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55) இளநீர் வியாபாரி. சண்முகம் தோட்டங்களுக்கு சென்று மொத்தமாக இளநீர் வாங்கி ஒவ்வொரு பகுதிக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று சாலையோரம் போட்டு விற்பனை செய்து வந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் இளநீர் வியாபாரம் செய்ய சென்ற சண்முகத்தை கொலையாளி வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டான்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இளநீர் வியாபாரி சண்முகத்தை வெட்டி கொலை செய்த மூர்த்தி என்பவர் இக்கரை தத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முன் சரண் அடைந்தார். தான்தான் இளநீர் வியாபாரி சண்முகத்தை வெட்டி கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்தான் மூர்த்தி. இவரது மனைவி பெயர் சரஸ்வதி.

    சரஸ்வதியிடம் இளநீர் வியாபாரி சண்முகம் அடிக்கடி பேசுவாராம். மேலும் செல்போனிலும் இருவரும் பேசிக் கொண்டிருப்பார்களாம்.

    இதை கண்காணித்த மூர்த்திக்கு தன்மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. சண்முகம் மீது கடும் ஆத்திரம் அடைந்தார்.

    இதையொட்டி சம்பவத்தன்று வியாபாரத்துக்காக சென்ற சண்முகத்தை மூர்த்தி மறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    சரண் அடைந்த மூர்த்தியை பவானி சாகர் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி, ஜெகனாதபுரம் காலனியை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் கவுரிபிரசாத் (வயது30). கவுரிபிரசாத் நேற்று இரவு வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

    சூளை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத வகையில் கவுரிபிரசாத் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கவுரிபிரசாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்காக போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கவுரிபிரசாத்தை சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கவுரிபிரசாத் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆப்பக்கூடல் அருகே வீட்டு வாசலில் இருந்த பாம்பை தொழிலாளி தெரியாமல் மிதித்ததில் கடித்து விட்டது. இதில் அவர் உயிரிழந்தார்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த ஒரிச்சேரி, இந்திரநகரை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 43). கூலி தொழிலாளி. மாதப்பன் சம்பவத்தன்று தனது வீட்டு அருகே உள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடித்து கொண்டு நடந்து வந்தார். வீட்டு வாசல் அருகே வந்த போது வாசலில் இருந்த பாம்பை கவனிக்காமல் மாதப்பன் மிதித்து விட்டார்.

    அப்போது அந்த பாம்பு மாதப்பனை கடித்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாதப்பன் இது குறித்து தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.

    அவர்கள் மாதப்பனை ஆப்பக்கூடலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மாதப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை இழிவாக பேசியதாக கூறி தமிழ்நாடு முழுவதும் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை இழிவாக பேசியதாக கூறி தமிழ்நாடு முழுவதும் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதேபோல் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான்பவன் முன்பு இன்றுகாலை காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர்கள் சரவணன், காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் ராஜப்பா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலை வர் சுரேஷ், மண்டல தலை வர்கள் ஜாபர்சாதிக், திருச் செல்வம் மற்றும் விஜய கன்னா, பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட தலைவர் ரவி கூறும்போது, ‘‘எச்.ராஜா ஈரோடு வந்தால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். கருப்புகொடி காட்டுவோம்’’ என்று கூறினார்.

    தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்ட ஒரு முறையும், இலங்கை தமிழர்களுக்காக ஒரு முறையும் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி என்று பழ. கருப்பையா பேசினார்.

    ஈரோடு:

    ஈரோடு மணல்மேட்டில் தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பழ.கருப்பையா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தனது வாழ்நாளில் கொள்கைகளை மக்களிடம் பரப்பி அதை நிறைவேற்றி கண்டுகளித்தவர் தந்தை பொயார். சுருங்கி போன தமிழை கடும் முயற்சிக்கு பிறகு பரப்பி வளர செய்தவர் அண்ணா.

    தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்ட ஒரு முறையும், இலங்கை தமிழர்களுக்காக ஒரு முறையும் ஆட்சியை இழந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

    ஆனால் சொத்து குவிப்பு வழக்கு உள்பட 2 வழக்குகளில் 2 முறை ஜெயிலுக்கு சென்றவர் ஜெயலலிதா. இந்த வேறுபாட்டை பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச் சாலையில் அனுபவித்த கொடுமையையும் கருணா நிதியின் மகன் என்ற பெருமையையும் ஒன்றாக நினைக்கும் மன சம நிலை பெற்று உள்ளதால் தான் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார்.

    காவிரிக்காக 22 ஆண்டு காலம் போராடி வருகிறோம். காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் பிரதமர் மோடி அதை நிறைவேற்ற விடாமல் கர்நாடத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொழில் நுட்ப குழுவை அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

    தமிழர்களின் பண் பாட்டை பாதுகாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தி வீர விளையாட்டை நிலை நிறுத்த வேண்டும் என்று சென்னை மொனாவில் லட்சக்கணக்கான மாணவர்கள்- இளைஞர்கள் திரண்டனர்.

    இது போல தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற தமிழ் தேசியம் தலை தூக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×