என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை கொன்ற வியாபாரி சிறையில் அடைப்பு
    X

    மனைவியை கொன்ற வியாபாரி சிறையில் அடைப்பு

    • ராமச்சந்திரனுக்கும், ஜெயப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் கத்தியால் ஜெயப்பிரியாவை குத்தினார்.

    பெருந்துறை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 38). இவருடைய மனைவி ஜெயப்பிரியா (32). இவர்களுக்கு, விஷ்ணு (12), சித்தார்த் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டியில் இருந்து வந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்னியவலசு என்ற ஊரில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார்.

    அவர் வீட்டில் முறுக்கு தயாரித்து ஊர், ஊராக சென்று வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெயப்பிரியாவுக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஜெயப்பிரியா தனது 2 மகன்களுடன் தாய் வீடான உசிலம்பட்டிக்கு சென்று அங்கு தங்கியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவனையும், மனைவியையும் உறவினர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜெயப்பிரியா மீண்டும் சென்னியவலசு வந்து கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    அப்போது ஜெயப்பிரியா தனது தாயின் நகையில் தனது பங்கை அவரது தங்கைக்கு கிடைக்க உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கணவனுக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    அதேபோல் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ராமச்சந்திரனுக்கும், ஜெயப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் கத்தியால் ஜெயப்பிரியாவை குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் ஜெயப்பிரியாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் பெருந்துறை புது பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சென்னிமலை ரோடு, வெள்ளோடு ரோடு காஞ்சிகோவில் ரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் ராமசந்திரனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராமச்சந்திரன் பெருந்துறை ரெயில் நிலைய ரோடு பூனம்பட்டி பிரிவு அருகே நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொட ர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராமச்சந்தி ரனை போலீசார் பெரு ந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார்.

    இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கோபிசெட்டி பாளையம் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×