என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செல்போன் மூலம் தகவல் அனுப்பி விட்டு பெண் மாயம்
  X

  செல்போன் மூலம் தகவல் அனுப்பி விட்டு பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மைதிலி தேவி தான் வீட்டை விட்டு செல்வ தாக வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல் அனுப்பினார்.
  • இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

  பெருந்துறை:

  பெருந்துறையை அடுத்த சீனாபுரம், வீரணம்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. இவரது மனைவி மைதிலி தேவி (வயது 39). இவர்கள் சொந்த மாக வீரணம் பாளையம் பகுதியில் தறி போட்டு தொழில் செய்து வருகின்ற னர்.

  இவர்களுக்கு வெற்றி என்ற மகனும், நிவேந்திரா என்ற மகளும் உள்ளனர். வெற்றி கருக்குபாளையம் பகுதியில் உள்ள தனது தாத்தா செல்வராஜ் வீட்டில் தங்கி துடுப்பதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரு கிறார்.

  இந்த நிலையில் வெற்றியின் செல்போனுக்கு அவரது தாய் மைதிலி தேவி தான் வீட்டை விட்டு செல்வ தாக வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல் அனுப்பினார். இதை யடுத்து வெற்றி மற்றும் அவரது தாத்தா செல்வராஜ் ஆகியோர் உடனடியாக வீரணம் பாளையம் வந்து பார்த்தனர்.

  அங்கு மைதிலி தேவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை அக்கம், பக்கம் மற்றும் உற வினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

  இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான மைதிலி தேவியை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×