search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மீனவர்களால் பரபரப்பு
    X

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மீனவர்களால் பரபரப்பு

    • 8 அணை நீர் தேக்கமே தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திடம் உள்ளது.
    • நீதிமன்ற தீர்ப்பின்படி பவானிசாகர் அணையின் மீன்பிடிப்பு உரிமையினை எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்க த்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பவானிசாகர் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிரு ப்பதாவது:-

    நாங்கள் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் மீனவர்கள். நாங்கள் எப்(பிஎல்) 10 பவானிசாகர் மீனவர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 322 உறுப்பினர்களும், பி.எப். 4 சிறுமுகை மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் 527 உறுப்பினர்கள் உள்ளோம்.

    மேலும் இணை உறுப்பின ர்களாக 586 உறுப்பினர்களும் என மொத்தம் 1435 நபர்கள் இரு சங்கங்களிலும் உறுப்பி னராக உள்ளோம். 622 சங்க உறுப்பினர்கள் அரசால் நியமனம் செய்யப்பட்ட பங்கு மீனவர்கள்.

    நேர்காணம் 622 பங்கு மீனவர்கள் தான் பவானி சாகர் அணையில் மீன் பிடித்து வருகிறோம். மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்பிடிப்பு சம்பந்தப்பட்ட தொழில்க ளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கள் மீன் பிடிப்புக்கு பரிசல், வலை மற்றும் இதர பொருட்களையும் எங்கள் சொந்த செலவில் செய்து வருகிறோம்.

    எங்கள் மீன் பிடிப்பு தொழிலுக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமோ, குத்த கைதாரர்களோ எந்த உதவி யும் செய்வதில்லை.

    இதனால்தான் எங்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி கடந்த வருடம் நவம்பர் மாதம் 21-ந் தேதி மற்றும் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி ஆகிய நாட்களில் 7 அம்ச கோரிக்கை வலி யுறுத்தி கடிதம் அளித்தோம்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் எவ்வித கோரி க்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று கூறி விட்டார்கள்.

    எனவே பவானி சாகர் அணையின் மீன்பிடிப்பு குத்தகை உரிமையினை இரு கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்கும் பட்சத்தில் பங்கு மீனவர்களின் 7 அம்ச கோரிக்கைகளை இரு கூட்டுறவு சங்கமும் வழங்கும் என்று கூறி யிருந்தோம்.

    அதற்கும் எந்தவித பதி லும் சொல்லவில்லை. இதனை அடுத்து நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்து அரசாணை எண் 332-ன் படி சில நிபந்தனைகளுடன் கூட்டுறவு சங்கத்திற்கே மீன்பிடிப்பு உரிமையினை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    தமிழ்நாட்டில் 56 அணை நீர் தேக்க மீன்பிடிப்பு, மீன் துறை வசம் உள்ளது. அதில் பெரும்பாலான நீர் தேக்க ங்கள் மீனவர் கூட்டுறவு சங்கமே நடத்துகிறது. உதாரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மிகப்பெரிய நீர் சேர்க்கும் ஆகும். அதையே மீனவர் கூட்டுறவு சங்கமே நடத்து கிறது. இவ்வாறு இருக்க மொத்தம் 8 அணை நீர் தேக்கமே தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திடம் உள்ளது.

    இந்நிலையில் தனியா ருக்கு மீன்பிடிக்க குத்தகை க்கு விடப்படுவதால் பங்கு மீன வர்களான நாங்கள் பெரிதும் பாதிக்கப்படு கிறோம்.

    எனவே பவானி சாகர் அணையின் மீன்பிடி ப்பினை நீதிமன்ற தீர்ப்பு ப்படி எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்கத்துடன் வழங்க வேண்டும். அல்லது பழைய முறைப்படி மீன் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

    எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி பவானிசாகர் அணையின் மீன்பிடிப்பு உரிமையினை எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்க த்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓராண்டு க்கு செலுத்த வேண்டிய மீன் பிடிப்பு குத்தகை தொகை, 5 ஆண்டுகள் செலுத்த வேண்டிய ராயல்டி தொகை, மீனவர் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகை, முன்வைப்பு தொகை ஆகியவற்றை எங்கள் இரு சங்கத்திடமும் பெற்றுக் கொண்டும் இதுவரை இடைக்காலமாக மீன் துறையோ அல்லது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமோ மீன்பிடிப்பினை நடத்தி எங்கள் பங்கு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×