search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
    X

    குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

    • பாசனத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
    • குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து மலர்கள் தூவி தண்ணீர் திறந்து விட்டப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப் பள்ளம் அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, மல்லிய துர்கம், கடம்பூர் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர், காட்டாறுகள் வழியாக அணையில் தேக்கி வைக்கப்படுகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை சார்பில் அணையில் பூஜை செய்து மலர்கள் தூவி தண்ணீர் திறந்து விட்டப்பட்டது.

    இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் வலது கரையில் 18 கனஅடி தண்ணீரும்,

    இடது கரையில் 6 கன அடி தண்ணீர் என மொத்தம் 24 நாட்கள் தொடரில் 20 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும். 4 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்யப்படும் என்றும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தனகிரி, குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் குப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×