என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் நிறுத்தம்
வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
இதனால் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிகாட்டு வலசு, சோலார், சோலார் வலசு, நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார் மேடு (முழுவதும்), 46 புதூர் (16 ரோடு பகுதி) மற்றும் சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
Next Story