என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு தெற்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறும்.
- மின்பயனீட்டாளர்கள் தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.
ஈரோடு:
ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 4-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு செயற்பொறியாளர், வினியோகம் ஈரோடு தெற்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறும்.
எனவே அக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு ஆகிய பகுதிகளிள் உள்ள மின்பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Next Story






