என் மலர்
உள்ளூர் செய்திகள்

செக் மோசடியில் ஈடுபட்ட நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை
- தர்மலிங்கம் செக் மோசடி வழக்கு தொடுத்துள்ளார்.
- கணேசனுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
பவானி:
அந்தியூர் கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (52). அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் பேக்கரி நடத்தி வருகிறார்.
இவர் அந்தியூர் அண்ணா சாலையை சேர்ந்த தர்மலிங்கம் (62) என்ப வரிடம் கடந்த 2018-ம் ஆண்டு 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்று 2 ரூபாய் வட்டி விகிதத்தில் ஓரா ண்டில் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.
இதற்காக 11.1.2019 தேதியிட்டு அந்தியூர் கனரா வங்கி செக் கொடுத்துள்ளார். 2019 ஜனவரி 14-ல் செக்கை அந்தியூர் இண்டியன் ஓவர்சீஸ் வங்கியில் கலெக்ஷன் போட்டபோது வங்கி கணக்கில் பணம் இல்லை.
இதை தொடர்ந்து கடந்த 5.3.2019-ல் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் தர்மலிங்கம் செக் மோசடி வழக்கு தொடுத்துள்ளார்.
வழக்கின் மனு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்டது. இதில் செக் மோசடியில் ஈடுபட்ட கணேசனுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
மேலும் இது சம்பந்தமாக 2 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளவும் அவகாசம் அளித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.






