search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைத்தறியாளர்கள் தினம் கொண்டாட்டம்
    X

    கைத்தறியாளர்கள் தினம் கொண்டாட்டம்

    • கைத்தறியின் கேந்திரமாக விளங்கும் சென்னிமலையில் இன்று கைத்தறியாளர் கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை:

    இன்று நாடு முழுவதும் கைத்தறி யாளர்கள் தினம் அரசால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.கைத்தறியின் கேந்திரமாக விளங்கும் சென்னிமலையிலும் இன்று கைத்தறியாளர் கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை இந்திரா நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற கைத்தறியாளர் கள் தின விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்திரா டெக்ஸ் தலைவர் ஏ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலாளர் சுகுமார் ரவி வரவேற்று பேசினார்.

    இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சி. பிரபு கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

    இந்த விழாவில் முகாசிபிடாரியூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ் என்கிற சுப்ரமணியம், முன்னாள் யூனியன் கவுன்சிலர் சி.கே ஆறுமுகம், தி.மு.க. நிர்வாகிகள் தோப்புக்காடு முருகேஷ், பிரஸ் ஆனந்த், கோயில் பாளையம் ஜம்பு , உட்பட கைத்தறி நெசவா–ளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அல்லி முருகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×