என் மலர்
உள்ளூர் செய்திகள்

புல்வெளியில் பரவிய தீயால் பரபரப்பு
- தென்னை மட்டைகளுக்கு பகலில் தீ வைத்துள்ளார்.
- தீ அருகில் இருந்த புல்வெளிக்கு பரவியது.
கொடுமுடி:
கொடுமுடியை அடுத்த பெருமாள்கோவில் புதூரை சேர்ந்தவர் ரெங்கசாமி விவசாயி. இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சவுக்கு கன்றுகளை நட்டு அவை மரங்களாக வளர்ந்து வருகின்றன.
இந்த காட்டின் அருகில் குவிந்து கிடந்த தென்னை மட்டைகளுக்கு பகலில் தீ வைத்துள்ளார். அப்போது தென்னை மட்டையில் பற்றிய தீ அருகில் இருந்த சவுக்கு மரங்கள் நிறைந்த பகுதியில் முளைத்திருந்த புல்வெளிக்கு பரவியது.
இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனையடுத்து இது குறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அங்கு பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அந்த தீ மேலும் பரவால் தடுத்தனர். இத னால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story