என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எந்திர முறையில் நெல் நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம்
    X

    எந்திர முறையில் நெல் நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம்

    • விவசாயிகள் எந்திர நடவு முறைக்கு தங்களை மாற்றி கொண்டுள்ளனர்.
    • பொங்கல் பண்டிகைக்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

    ஈரோடு:

    காலிங்கராயன் பாசன பகுதியில் முதல் போக அறுவடை பணிகள் முடிவடைந்து 2-ம் போக சாகுபடிக்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    இந்த பகுதியில் கூலி ஆட்கள் மூலமாக மட்டுமே நடவு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.

    ஆனால் ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு அதிகப்படியான விவசாயிகள் எந்திர நடவு முறைக்கு தங்களை மாற்றி கொண்டுள்ளனர்.

    அதற்கு ஏற்ப தற்போது நாற்றங்கால்களை தயார்படுத்தி வரும் விவசாயிகள் பொங்கல் பண்டிகைக்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

    எந்திர நடவு மூலம் ஏக்கருக்கு ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவு குறைவதுடன், குறைவான நேரத்தில் நடவு பணிகளை முடிக்க இயலும் என தெரிவித்தனர்.

    மேலும் போதிய இடைவெளியுடன் கூடிய எந்திர நடவால் பயிர்கள் நன்கு கிளைத்து வளர்வதாகவும், அதிக மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறினர்.

    Next Story
    ×