search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் ரூ.50.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் ரூ.50.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் ரூ.50.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
    • முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

    பவானி

    பவானி தொட்டி–பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்வராயன் பாளையம் ராஜீவ் காந்தி நகரில் 6.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி, ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிட கட்டிடம் பராமரிப்பு பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி கோட்டை ஜீவா செட் அருகில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நீர் உந்து நிலையம் அமைத்து பைப்லைன் போடும் பணி, ஐஸ்வர்யா நகரில் ரூ.9.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாக்கடை கட்டுமான பணி, முனியப்பன் நகரில் ரூ.2.86 லட்சம் மதிப்பீட்டில் 5000 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் தண்ணீர் தொட்டி அமைத்து கூடுதல் பைப்லைன் அமைக்கும் பணி, ஓப்லி மில் பழைய காலணி பகுதியில் ரூ.2.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் போட்டு 2000 லிட்டர் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்தல் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், பவானி எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன் பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பவானி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தங்கவேலு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், தொட்டிபாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சொசைட்டி தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×