search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோட்டில் வழிந்தோடிய ஆசிட் வெள்ளம்
    X

    ரோட்டில் வழிந்தோடிய ஆசிட் வெள்ளம்

    • ஆசிட் வெள்ளம் போல் குட்டப்பாளையம்- கம்புளியம்பட்டி தார் ரோட்டில் வழிந்தோடியது.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, குட்டப்பாளையம் பகுதியில் பெருந்துறை சிப்காட் வளாகம் உள்ளது.

    இங்கு கள்புளியம்பட்டி ஊராட்சி எல்லை பகுதி அருகே தனியாருக்கு சொந்தமான கெமிக்கல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5-க்கும் மேற்பட்ட பெரிய எவர் சில்வர் டேங்கில் ஆசிட் இருப்பு வைத்து சில்லரை விற்பனை நடக்கிறது.

    இந்நிலையில் இரவு இந்த ஆசிட் இருப்பு வைத்துள்ள டேங் ஒன்றில் சிறிய வெடிப்பு ஏற்பட்டு ஆசிட் கசிய தொடங்கியது. கசிய தொடங்கிய ஆசிட் வெள்ளம் போல் கம்பெனியின் மண் ரோடு வழியாக வழிந்தோடி குட்டப்பாளையம்- கம்புளியம்பட்டி தார் ரோட்டில் வழிந்தோடியது.

    பொதுமக்கள் செல்லும் தார் ரோட்டில் நுரையும், புகையுமாக ஆசிட் இருந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு பொதுமக்கள் திரண்டு கம்பெனி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உரிமையாளர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தண்ணீர் கொண்டு வந்து பீய்சி அடித்து ஆசிட் வீரியம் குறைந்து விடுவதாவும், அதன் பின்பு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் உரிமையாளர் உறுதி கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×