என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பால் வியாபாரி பலி
- கோபிசெட்டிபாளையம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பால் வியாபாரி பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
கோபி,
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த புகலூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன்(60). பால் வியாபாரி. நேற்று இரவு காளியப்பன் தனது மொபட்டில் கோபி -அந்தியூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மொபைட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைக்க ப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காளி யப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
Next Story






