என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்
    X

    கோபிசெட்டிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்

    • கோபிசெட்டிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்
    • சாலை விரிவாக்க பணியால் விபரீதம்

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபி- சக்தி ரோட்டில் கடந்த சில நாட்களாக 4 வழி சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. அதே பகுதியில் பாலம் கட்டி சாலையை அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் கோபி செட்டிபாளையம் வந்தார். பின்னர் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது கோபி-சக்தி ரோடு சிங்கிரிபாளையம் பகுதியில் தினேஷ் குமார் வந்து கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வந்துள்ளது. இருள் சூழ்ந்து இருந்ததால் இதை கவனிக்காத தினேஷ்குமார் காரை இயக்கி உள்ளார். அப்போது கார் பாலம் கட்டும் தடுப்பை இடித்து அருகில் உள்ள குழியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தினேஷ்குமார் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயம் அடைந்த வர்களை மீட்டு சிகிச்சை க்காக கோபிசெட்டி பாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றனர்.

    Next Story
    ×