என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

- விசாரணையில் கொள்ளையர்கள் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் தப்பி சென்றது தெரிய வந்தது.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை நால் ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைகடையின் சுவரில் துளை போட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உள்ளனர்.
அப்போது அவர்கள் லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்தது. இதனால் மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.இதனால் பல லட்சம்மதிப்புள்ள தங்கம், வெள்ளி தப்பியது.
இதுப்பற்றி தெரிய வந்ததும் கடையின் முன் பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த காவலாளி மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்த காவலாளிகள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது நகை கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து அவர்கள் கடையின் உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் தப்பி சென்றது தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை பிடிக்க பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன், மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் தலைைமயில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அருகில் உள்ள திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.