search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி வழியாக இயங்கும்  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர  சிறப்பு ரெயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு - வாரம் இரு முறை இயக்க பயணிகள் வலியுறுத்தல்
    X

    தென்காசி வழியாக இயங்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு - வாரம் இரு முறை இயக்க பயணிகள் வலியுறுத்தல்

    • எர்ணாகுளத்தில் இருந்து தென்காசிக்கு இரவு 8.15 மணிக்கு வந்து மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.
    • வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு தென்காசிக்கு திங்கள் கிழமை அதிகாலை வந்து சேரும்

    தென்காசி:

    தென்காசி வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில் நிலையங்களுக்கிடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலின் சேவை நவம்பர் மாதம் வரை இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ரெயிலின் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு இரவு 8.15 மணிக்கு வந்து மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து நவம்பர் 20-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு திங்கள் கிழமை அதிகாலை 3.50 மணிக்கு வந்து மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் .

    இந்த ரெயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

    ஜூன் 4-ந்தேதி முதல் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை இந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு பின் ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் நவம்பர் 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது. தற்போது ஜனவரி 01 வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தென்காசி யிலிருந்து கிழக்கு டெல்டா மாவட்ட பகுதிகளான திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கு இந்த சிறப்பு ரெயில் மிகவும் உதவிகரமாக உள்ளது.

    அதேபோல் திங்கள் கிழமை அதிகாலை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் போன்ற பகுதிகளுக்கும் செல்வதற்கு இந்த ரெயில் திங்கள் கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைந்த பின் சனிக்கிழமை மதியம் 12.35 வரை காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே காலியாக நிறுத்தி வைக்கப்படும் இந்த ரெயில் பெட்டிகளை கொண்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரெயிலாக இயக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

    கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே கால அட்டவணை சந்திப்பின்போது இந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இரு முறை இயங்கும் வகையில் முன்மொழியப்பட்டு ரெயில்வே வாரிய ஒப்புதலுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×