search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் இரட்டைகுளம், வீராணம் கால்வாய் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்- கலெக்டரிடம் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்  மனு
    X

    கலெக்டர் ஆகாஷிடம் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் மனு வழங்கிய காட்சி. அருகில் தொழிலதிபர் பாலகிருஷ்ணன்.


    தென்காசி மாவட்டத்தில் இரட்டைகுளம், வீராணம் கால்வாய் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்- கலெக்டரிடம் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் மனு

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் சிவபத்மநாதன் மாவட்ட கலெக்டர் ஆகாசை சந்தித்து ஒரு கோரிக்கை மனு வழங்கினார்.
    • இரட்டைகுளம் கால்வாய் திட்ட பணிக்கு ரூ.45 கோடியே 12 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பொதுப்பணித்துறை முதன்மை அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்டு தற்போது நீதித்துறையில் நிலுவையில் இருந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் சிவபத்மநாதன் மாவட்ட கலெக்டர் ஆகாசை சந்தித்து ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    கால்வாய் பணி

    இரட்டைகுளம் கால்வாய் திட்ட பணிக்கு ரூ.45 கோடியே 12 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பொதுப்பணித்துறை முதன்மை அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்டு தற்போது நீதித்துறையில் நிலுவையில் இருந்து வருகிறது.


    அதேபோல வீராணம் கால்வாய் திட்டப் பணிக்கு ரூ.15 கோடியே 44 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதுவும் நிதித்துறை ஒப்புதலுக்காக இருக்கிறது. இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

    திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போதிய இருப்பிடம் இல்லாமல் மரத்தடியில் இருந்து கல்வி கற்று வருகிறார்கள்.அந்த ஊரில் இருக்கிற அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கி தர இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு தற்போது அவருடைய அறிக்கையை பள்ளிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தி இந்து சமய அறநிலை யத்துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஸ் வசதி

    நாலாங்கட்டளையில் இயங்கி வருகிற உயர் நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் பயன்படுத்து வதற்கு கழிப்பிட வசதி செய்துகொடுக்க வேண்டும்.

    ஊத்துமலை மேல்நிலைப்பள்ளிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கவும் மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    கடையம் ஒன்றியம் அணைந்த பெருமாள் நாடனூர் ஊராட்சி சொக்கலிங்க புரத்திற்க்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில கூறப்பட்டிருந்தது.

    மேலும் கடந்த 15 நாட்களாக மாவட்டத்தில் நடைபெற்று வருகிற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வேண்டியும், வாகனம் வேண்டியும் இலவச வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டுகள் வேண்டியும் கொடுக் கப்பட்ட மனுக்களையும் அவர் வழங்கினார்.

    அப்பொழுது தொழி லதிபர் பாலகிருஷ்ணன் உடன் இருந்தார்.

    Next Story
    ×