என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூரில் பல ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்:  எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.-   அ.தி.மு.க.- அ.ம.மு.க.வினர்  -பேரூராட்சி துணை தலைவரிடம் வாக்குவாதம்
    X

    அரூர் பஸ் நிலைய பகுதிகளில் போலீஸ் துணையுடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றிய காட்சி.

    அரூரில் பல ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்: எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.- அ.தி.மு.க.- அ.ம.மு.க.வினர் -பேரூராட்சி துணை தலைவரிடம் வாக்குவாதம்

    • போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் மற்றும் வணிக வளாகங்களை நடத்தி வந்தனர்.
    • பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் பேரூராட்சிக்குட்பட்ட போக்குவரத்து பகுதிகளில் பொதுமக்கள் சென்று வரும் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் மற்றும் வணிக வளாகங்களை நடத்தி வந்தனர்.

    இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வணிக வளாக கடைகளை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அரூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேருந்து நிலைய வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு அவற்றை அகற்றக்கோரி பல்வேறு முறை

    களில் அறிவுரை வழங்கப்பட்டது.

    இதை பொருட்படுத்தா மல் ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்கள் அலட்சி யத்துடன் இருந்து வந்த நிலையில்சுமார் -100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்போடு பேரூராட்சி செயல் அலுவலர் கலை ராணி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தூய்மை பணியாளர்களை தி.மு.க. வினர் ஒருமையில் பேசிய தால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் ஆக்கிரமிப்பு அகற்ற உரிய கால அவகாசம் வேண்டும் என்று தி.மு.க.,அ.தி.மு.க.,அ.ம.மு.க.வினர் தி.மு.க. பேரூராட்சி துணை தலைவர் சூர்யா தனபாலிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    Next Story
    ×