search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி கருத்தரங்கம்
    X

    தொழில் முனைவோர் வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி கருத்தரங்கம்

    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
    • சாதனை படைத்த தொழில் அதிபர்களோடு மாணவர்கள் கலந்துரையாடினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி- புத்தாக்க மையம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவு வளர்ச்சி- புத்தாக்க மையமும் இணைந்து இ்றுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி கருத்தரங்கம் நடத்தியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் எஸ்.காயத்ரி தொழில் திட்டமிடல் மற்றும் புதிய தொழிைல தொடங்குவதில் உள்ள சவால்கள், அதை எவ்வாறு எதிர் கொண்டு வெற்றியடைவது என்பது பற்றி விளக்கி பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மைய உதவி இயக்குனர் ஜீ.அகிலா தொழில் முனைவோர்களுக்கு அரசு ஏற்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பின் நெல்லை மாவட்ட துணை இயக்குனர் ஜெரினாபூபி அரசு தொழில் தொடங்க வழங்கும் நிதியுதவி மற்றும் சலுகைகள் குறித்து பேசினார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் பகுதியில் சாதனை படைத்த தொழில் அதிபர்களோடு மாணவர்கள் கலந்துரையாடினர்.

    இதில் திருச்செந்தூர் கே.சின்னத்துரை அன்கோ உரிமையாளர் ஜெ.முருகன், விவேகா கட்டுமான உரிமையாளர் பொறியாளர் கே.நாராயணன், வீ.ஆர்.கே. லிங்சின் உரிமையாளர் கே.பி.ரவிச்சந்திரன் மற்றும் மிஸ்டர் கிட்டுக் கிச்சன் உரிமையாளர் எஸ்.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். முன்னதாக தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புத்தாக்க மைய ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம் வரவேற்றார். தொழில் முனைவோர் மையத்தின் இயக்குனர் மாலைசூடும் பெருமாள் நன்றி கூறினார்.

    கருத்தரங்க ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின்படி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புத்தாக்க நிலையத்தின் இயக்குனர் மகேஷ் குற்றாலம் மற்றும் அதன் கள இயக்குனர் சுவேதரன் வழிகாட்டுதலின்படி பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவி, முருகேஸ்வரி, மருதையா பாண்டியன், ராஜ்பினோ, செல்வகுமார், கருப்பசாமி, திலிப்குமார், சிரில் அருண், ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் பாலு, முத்துக்குமார், ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், அந்தோணி சகாய சித்ரா, கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×