என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேசிய களரி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க திருப்பூரில் உற்சாக வரவேற்பு
  X

  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி

  தேசிய களரி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க திருப்பூரில் உற்சாக வரவேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுர்ஜித், ஜீவா இருவரும் தங்கம் வென்று அசத்தினர்.
  • டி.ஒய்.எப்.ஐ., விளையாட்டு கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  திருப்பூர் :

  ஹரியானா மாநிலம் சண்டிகர் மாவட்டம் பஞ்சகுல்லாவில் கேலோ இந்தியா போட்டி நடந்தது. 13 மாநிலங்களை சேர்ந்த 231 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 25 பேர் பங்கேற்றனர்.

  திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 11 பேர் கலந்து கொண்டனர். இதில் சுர்ஜித், ஜீவா இருவரும் தங்கம் வென்று அசத்தினர். சுவேதா வெள்ளி வென்றார். இன்பதமிழன், யுவனேஸ்வர், பத்மேஷ்ராஜ், ஜூவா, செகுவரா, சுவேதா, திவ்யதர்ஷினி, சுருதி ஆகிய 8பேர் வெண்கலம் வென்றனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம், களரி பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, 8 வெண்கலம் என 11 பதக்கங்களை கைப்பற்றினர்.கேலோ இந்தியாபோட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் திரும்பிய மாணவர்களுக்கு ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் தலைமையில் அக்கட்சியினர், டி.ஒய்.எப்.ஐ., விளையாட்டு கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  Next Story
  ×