search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்
    X

    நீலகிரியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்

    • நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    ஊட்டி,

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளை போன்று முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ''அரசு பள்ளி களைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் வாகனப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

    இதுதவிர ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட நகராட்சியில் 10 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் உள்ளன.

    நீலகிரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது. ஊட்டி ஏ.டி.சி பகுதியில் முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, இந்த வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சர்வ சிக்ச அபியான் திட்ட உதவி அலுவலர் அர்ஜூனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், பிரமோத், சுஜித், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் இம்மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    விழிப்புணர்வு வாகனம் மூலம் பல்வேறு பகுதிக ளுக்கும் சென்று அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    அரசு பள்ளிகளில் ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக்கொள் ளும் எண்ணும் எழுத்தும் திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் மாநில அளவிலான கலை திருவிழா, சிறார் திரைப்பட விழா, இலக்கிய திருவிழா, விளை யாட்டுப்போட்டிகள், வானவில் மன்ற போட்டி கள், வினாடி-வினா மூலம் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இல்லம் தேடி கல்வித் திட்டம், வானவில் மன்றம், தேன்சிட்டு, புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசுப்பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1000 கல்வி உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள், காலை உணவு திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்படும்.இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதே ஆகும். எனவே பொதுமக்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்த்துபயன் பெறலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் ஊட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஷீலா, ஆசிரியர் பயிற்றுநர்கள் எழிலரசன், விஜயராஜ், ஜமுனா ராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன் மற்றும் ஜெகதீஸ்குமார் மற்றும் இல்லம் தேடி கல்வியின் மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் பிரமோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×