search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது
    X

    செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் சாந்தி, பொதுமக்களுக்கு வழங்கினார்.

    ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது

    • செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட்டு நியாயவிலை கடைகள் மூலம் விலையின்றி வழங்கப்படும்.
    • செறிவூட்டப்பட்ட அரிசியில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, போலிக் அமிலம் கருவளர்ச்சி மற்றும் ரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பாக செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அட்டைதாரர்களான குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னுரிமை குடும்ப உணவுபொருள் வழங்கல் துறை சார்பாக பொது விநியோகதிட்டத்தின்கீழ் நியாயவிலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியானது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்குகீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரப்படுகிறது.

    செறிவூட்டப்பட்ட அரிசியானது 1.4.2023 முதல் நியாயவிலை அங்காடிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது 1:100 என்ற விகிதாச்சாரத்தில் கலக்கப்பட்டு சமமான செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட்டு நியாயவிலை கடைகள் மூலம் விலையின்றி வழங்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

    செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள ஊட்டசத்தானது ரத்த சோகையினை தடுக்கவும், உடலுக்கு தேவையான இரும்பு சத்து, போலிக் அமிலம் கருவளர்ச்சி மற்றும் இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயற்கையான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. பொது விநியோகதிட்டத்தின் கீழ் நியாய விலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை பெற்று பயன்பெருமாறு கேட்டுக ்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், இந்நிகழ்ச்சியில் செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் சாந்தி, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

    Next Story
    ×