search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு - அதிகாரிகள் ஆய்வு
    X

    ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு - அதிகாரிகள் ஆய்வு

    • லோயர்கேம்பில் இருந்து வைகை அணை வரை முல்லை ப்பெரியாறு ஆற்றின் கரையினை தனிநபர்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை எச்சரித்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் மறைமுக பாசனம் மூலம் தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லோயர்கே ம்பில் இருந்து வைகை அணை வரை முல்லை ப்பெரியாறு ஆற்றின் கரையினை தனிநபர்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்து வருவதால், ஆற்றின் அகலம் சுருங்கிக் கொண்டே செல்கின்றது.

    இதனை தடுக்கும் விதமாக பொதுப்பணித்துறையினர் முல்லைப்பெரியாறு ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கம்பம் காமயகவுண்டன் பட்டி செல்லும் சாலையில் முல்லைப்பெரியாறு பாலம் உள்ளது.

    இந்த பாலத்தின் வடக்குப் பகுதியில் மயானம் அருகே தனிநபர் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் கரையை சமன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருவதாக காமயகவுண்டன் பட்டி வி.ஏ.ஓ. நஜீம்கானிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வி.ஏ.ஓ. ஆய்வு நடத்தினார். அதில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கரையை சமன்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி னார். பின்னர் பொதுப்பணி த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை யடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை எச்சரித்த னர். இது குறித்து பொது ப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    முல்லைப்பெரி யாற்றின் கரையோரங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×