என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனி அல்லிநகரம் நகராட்சி அவசர கூட்டம்
  X

  தலைவர் ரேணுபிரியா தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

  தேனி அல்லிநகரம் நகராட்சி அவசர கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
  • உறுப்பினர்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

  தேனி:

  தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

  துணைத்தலைவர் செல்வம், ஆணையாளர் வீரமுத்துக்குமார், பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் விஜயன், பிரிட்டிஷ், மணிகண்டன், தினேஷ்குமார், நாராயண பாண்டியன், நாகராஜன், அய்யனார் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்திட நிதி பகிர்வில் உள்ள பணிகள் உள்பட 7 கூட்ட பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளில் உள்ள போர்வெலில் உடைந்த தண்ணீர் தொட்டிகள் சரிசெய்ய வேண்டும். சேதமடைந்த பேவர் பிளாக் கற்களை மாற்ற வேண்டும். தெரு மின்விளக்கு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அதுபோல தெருக்களில் பயனற்று கிடக்கும் போர்வெல் தண்ணீர் தொட்டிகளை அகற்றி விட்டு சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

  இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பதில் அளித்தனர்.

  Next Story
  ×