என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் தொடர் மழை எழும்பள்ளம் ஏரி முழுகொள்ளளவை எட்டியது
    X

    முழுகொள்ளளவை எட்டிய எழும்பள்ளம் ஏரி.

    கொடைக்கானலில் தொடர் மழை எழும்பள்ளம் ஏரி முழுகொள்ளளவை எட்டியது

    • கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
    • மேல்மலை கிராமத்தில் உள்ள எழும்பள்ளம் ஏரி முழுகொள்ளளவை எட்டி நீர் மறுகால் செல்கிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் உள்ள எழும்பள்ளம் ஏரி முழுகொள்ளளவை எட்டி நீர் மறுகால் செல்கிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேல்மலை கிராமங்களில் பூண்டு, கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் இந்த ஏரியில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரி முழுகொள்ளளவை எட்டியுள்ளது.

    இந்த ஏரியை புனரமைக்கவும், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளவும் தமிழக அரசு சார்பில் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உடைப்பு சரிசெய்யப்படாததால் அதிகளவு தண்ணீர் வெளியேறி வீணாகி செல்லும் நிலை உள்ளது. பணிகளை மேற்கொள்ளாததால் போதிய நீரை தேக்கி வைக்க முடியாத நிலையும் உள்ளது.

    எனவே இப்பணிகளை அறுவடை காலம் தொடங்க உள்ள இந்த காலத்திலாவது நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்போது வெள்ளைப்பூண்டு மற்றும் கேரட் அறுவடை பணிகள் இன்னும் ஒரு சிலநாட்களில் ெதாடங்க உள்ளதால் அதிகாரிகள் எழும்பள்ளம் ஏரியை சீரமைக்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    தற்போது மன்னவனூரில் பல்ேவறு சுற்றுலா மேம்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாகனங்கள் அதிகளவில் வருவதால் ஒரு சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர தடைசெய்யப்பட்ட மரங்கள் அதிகளவு நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவை நிலத்தடி நீரை சேமிக்க விடாமல் செய்யும் ஆபத்து கொண்டதாகும்.

    எனவே வேளாண் அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×