search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டி
    X

    கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டி

    • மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள், நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்க உள்ளது.
    • மாணவர்கள் குலுக்கல் சீட்டு மூலம் தலைப்பினை தேர்வு செய்து பேச வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா் மற்றும் கருணாநிதி ஆகியோர் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள், நாளை (13-ந்தேதி) தொடங்கி 14ந்தேதி வரை 2 நாட்கள் நடக்க உள்ளது.

    இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள், ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ஜூலை 13, 14ந்தேதிகளில் நடக்க உள்ளன.

    இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் மூன்று பரிசாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    மேலும் பள்ளிகளில் நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரை தோ்வு செய்து, அவா்களுக்கு சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

    முன்னதாக பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் குலுக்கல் சீட்டு மூலம் தோ்வு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேச வேண்டும். எனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் உரிய படிவத்தை பூா்த்தி செய்து பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் இன்று (12ந்தேதி) மாலை 6 மணிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×