என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு
    X

    வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு

    • கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
    • யானை ஒன்று காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக தாளவாடியில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை சாப்பிடு வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.

    அந்த வழியாக வந்த கார், அரசு பஸ், லாரிகளை வழி மறித்து கரும்பு கட்டு உள்ளதா என பார்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த யானை சாலையோரம் நடமாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு கட்டுகளுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் வாகனங்களை தற்போது வழிமறித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலையில் வாகனத்தை மிக வேகத்தில் இயக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் ஏர்கா ரன்களை ஒழிக்க கூடாது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×