என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் முதியவரை தாக்கி ரூ.1¾ லட்சம் கொள்ளை
- வாலாஜாபாத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் வசூல் செய்து விட்டு காஞ்சிபுரம் பஸ் நிலையம் வந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முதியவர் ரத்தினக்கரன் வைத்திருந்த பணப்பையை பறித்தனர்.
காஞ்சிபுரம்:
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தினக்கரன்(66). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாலாஜாபாத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் வசூல் செய்து விட்டு காஞ்சிபுரம் பஸ் நிலையம் வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முதியவர் ரத்தினக்கரன் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால் அவர் பணப்பையை விடாமல் பிடித்ததால் சுமார் 100 மீட்டருக்கு மேல் சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். பின்னர் அவரை தாக்கி பணத்தை பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் முதியவர் ரத்தினக்கரன் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






