என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எடப்பாடி பழனிசாமி நாளை தருமபுரி வருகை
  X

  எடப்பாடி பழனிசாமி நாளை தருமபுரி வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எடப்பாடி பழனிசாமி நாளை தருமபுரி வருகிறார்.
  • அ.தி.மு.க.வினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

  தருமபுரி,

  தருமபுரி நகர அ.தி.மு.க. செயலாளர் பூக்கடை பி. ரவி-ராஜாத்தி தம்பதியின் மகள் டாக்டர்.ஆர்.கீதாவுக்கும், எஸ்.மனோகரன்-சாந்தி தம்பதியின் மகன் எம்.சிவபிரீத்தம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா தருமபுரி, பென்னாகரம் சாலையில் உள்ள ஜோதி திருமண மகாலில் நாளை (19,2,23) நடைபெற உள்ளது.

  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து வதற்காக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால போது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை தருமபுரி வருகிறார்.

  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், மல்லிகா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

  மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுரோவு வங்கியின் தலைவருமான எஸ்.ஆர்.வெற்றிவேல் வரவேற்று பேசுகிறார். அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிங்காரம்,முல்லைவேந்தன், சம்பத்குமார், அன்பழகன், கோவிந்தசாமி, பொன்னுவேல் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

  இதையொட்டி திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள தருமபுரிக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க பூக்கடை பி.ரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

  Next Story
  ×