search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ளம் புகாமல் தவிர்க்க மண் கொட்டும் பணி
    X

    கரையோரம் பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு சரி செய்யும் பணி நடந்த காட்சி.

    குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ளம் புகாமல் தவிர்க்க மண் கொட்டும் பணி

    • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது.
    • காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர்.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களை பாதுகாக்க, பாதுகாப்பு மையங்களும் தாயார் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் மணிமேகலை தெரு, கலைமகள் தெரு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, இந்த குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். எனவே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதிகள் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனிடையே, தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக மணிமேகலை தெருவில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×