search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா காலகட்டத்தில்   தியாக உணர்வுடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவம்-   தருமபுரி டீன் அமுதவல்லி பெருமிதம்
    X

    மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி. 

    கொரோனா காலகட்டத்தில் தியாக உணர்வுடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவம்- தருமபுரி டீன் அமுதவல்லி பெருமிதம்

    • இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961-ம்ஆண்டு பெற்றார்.
    • இந்நாளில் எங்கள் மருத்துவ குடும்பங்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் தின வாழ்த்துக்கள்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி இன்று தேசிய மருத்துவ தினத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திரராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.

    இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961-ம்ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

    அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அயராது உழைத்து இங்கு வந்த அனைத்து நோயாளிகளின் உயிரை தங்கள் உயிர் என காப்பாற்றினர். அனைத்து நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சுவாசக் காற்றும் மற்றும் போதிய மருந்துகள், உணவு மற்றும் உயிர் காக்கும் கவசம் ஆகியவற்றை போதுமான அளவு எங்களுக்கு கொடுத்து எங்கள் சேவை சிறக்க உறுதுணை புரிந்த முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்லூரி இயக்குனர் ஆகியோருக்கு எங்களது நன்றிகள் பல. இந்நாளில் பெருந்தியாகத்தில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவ தின வாழ்த்துக்களை சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளோம்.

    இந்நாளில் எங்கள் மருத்துவ குடும்பங்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் தின வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×