search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் தண்ணீர் திறப்பால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் தாமதம்
    X

    முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

    கூடுதல் தண்ணீர் திறப்பால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் தாமதம்

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு 646 கனஅடிநீர் மட்டுமே வருகிறது. மழை தாமதமாகி வருவதால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • 2-ம் போக நெல்சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையில் சாரல்மழை மட்டுமே பெய்து வருகின்றது.

    மேலும் முல்லைபெரியாறு அணைநீர்மட்டம் 135.20 அடியில் உள்ளது. ரூல்கர்வ் முறைப்படி நவம்பர் 4-ந்தேதிக்கு பின்னர்தான் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் தேக்க முடியும். எனவே பருவமழையை கருத்தில் கொண்டு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.

    இதனால் மின்உற்பத்தி நிலையத்திலும் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு 646 கனஅடிநீர் மட்டுமே வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1500 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை தாமதமாகி வருவதால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் 2-ம் போக நெல்சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. 1519 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 60 கனஅடிநீர் உபரியாகவும், 40 கனஅடிநீர் பாசனத்திற்கும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×