search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
    • தொடர் மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின. வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்தது. கடந்த 4 நாட்களாக ராசிபுரம் பகுதியில் மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் இன்று காலை 10 வரை நிற்காமல் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் மழையால் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    தொடர் மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்து அளவில் காணப்பட்டது. தினசரி மார்க்கெட்டில் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ராசிபுரம் மாரியம்மன் திருவிழாவை ஒட்டி போடப்பட்டு இருந்த கடைகளில் மழையின் காரணமாக வியாபாரம் மிகவும் மந்த நிலையில் காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்

    பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியதால், சாலை ஓரங்களில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த சிறு வியாபார கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைக் காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    இன்று காலையும் இடை விடாது மழை பெய்து வருவதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். தொடர் மழையால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×