search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியாவை திராவிட மாடல் ஆட்சி ஆளும் சூழ்நிலை உருவாகும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிய போது எடுத்த படம்.

    இந்தியாவை திராவிட மாடல் ஆட்சி ஆளும் சூழ்நிலை உருவாகும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

    • விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனம் காந்தி திடலில் நடைபெற்றது.
    • விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் திண்டி வனம் காந்தி திடலில் நடை பெற்றது. தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் தலை மையில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாரு மான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 ஆண்டு களில் தி.மு.க. அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நாளில் நூறாண்டு காலம் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிடமாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். மக்களுடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்கின்ற திட்டம் தான் திராவிட மாடல் ஆட்சி. நீட்பொதுத்தேர்வில் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்படுகின்றது. இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை தற்போது இந்தியா முழுநவதும் வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்கின்ற பல்வேறு திட்டங்களை இந்தியாவை ஆளுகின்ற பா.ஜனதாவின் பிரதமர் நரேந்திர மோடி , முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் திட்டம் இலவசம் எனவும், வீண் திட்டங்கள்என அறிவித்துவிட்டு இன்று கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் திட்டங்களைசெயல்படுத்த போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவர் மு .க .ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் என்பதை நிலை நிறுத்தி எதிர்காலத்தில் இந்தியாவைதிராவிட மாடல் ஆட்சி ஆளுகின்ற நிலை உருவாகும். இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரமணன், தி.மு.க. நிர்வாகி வக்கீல் அசோகன், மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், துணை அமைப்பாளர் ரிஸ்வான், நகர துணை செயலாளர் ஓவியர் கவுத மன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×