search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடிகால்- வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடக்கம்
    X

    வடிகால்கள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    வடிகால்- வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடக்கம்

    • 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி, வீரசோழன், மஞ்சளாறு, மகிமலையாறு, விக்ரமண் ஆறு, அய்யாவையானாறு, பழவாறு, மண்ணியாறு, தெற்குராஜன் ஆகிய ஆறுகளிலிருந்து பிரியும் பிரிவு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாரிட விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் நடப்பாண்டு 2023-24, 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரபடவுள்ளதால் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டங்களை சேர்ந்த 71ஆயிரத்து 811.69 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தங்குதடையின்றி கடைமடை வரை சென்றடையும்.

    மேலும் மழை வெள்ளக்காலங்களின் பாசன நிலங்களில் தேங்கும் வெள்ள நீர் விரைவாக வடியவும் உறுதி செய்யப்படும்.அந்த வகையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் ஊராட்சியில் மஞ்சளாற்றின் வலது கரையில் பிரியும் வாழ்க்கை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.

    இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி 25.04 கி.மீ தூரத்திற்கு ரூ.22.05 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. மேற்கண்ட வாய்க்கால் தூர்வாருவதால் தரங்கம்பாடி வட்டத்தை சார்ந்த மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், செம்பனார்கோயில் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், ஜெயராமன், சீனிவாசன், சண்முகம், உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர், வீரப்பன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்ஸ்ரீதர், ஒப்பந்தக்காரர் வேல்முருகன்,தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, செம்பனார்கோயில் ஒன்றிய ஆணையர் மீனா, மற்றும் உழவர் குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×