என் மலர்
உள்ளூர் செய்திகள்

பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள்.
கம்பம் அருகே கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
- சுருளிப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
- இளஞ்சிட்டு புள்ளிமான், பூஞ்சிட்டு, என 4 வகையான பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இந்த போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் சாலையில் இருபுறமும் நின்று ஆரவாரம் செய்தனர்.
இளஞ்சிட்டு புள்ளிமான், பூஞ்சிட்டு, என 4 வகையான பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசு தொகை பரிசாக வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் முதல் கொடி வாங்கும் வண்டிகளுக்கும் குத்துவிளக்கு, அண்டா, துண்டு பரிசு வழங்கப்பட்டது. சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி வரை சாலையில் சுமார் 8 கி.மீ தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயத்தை காண 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.






