search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவுற்ற  சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்- பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்
    X

    மேயர் ஜெகன் பெரியசாமி மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவுற்ற சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்- பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்

    • வாகனம் நிறுத்துவதற்கு என்று பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களில் மீது வாகனங்களை நிறுத்துமாறு மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    • சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித்தடத்தையும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் முடிவற்ற சாலைகளான அண்ணா நகர் மெயின் ரோடு, ஜெயராஜ் ரோடு,போல்டன்புரம் ரோடு, தேவர்புரம் ரோடு, வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோவில் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்கு வரத்திற்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சாலை யின் இருபுறம் வாகனம் நிறுத்துவதற்கு என்று பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களில் மீது வாகனங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் அந்த சாலையின் இருபுறமும் பதிக்கப்பட்ட பேவர் கற்களில்1.5 மீட்டரானது பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் நடந்து செல்வதற்கு மட்டுமே, எனவே மீதமுள்ள இடமானது வாகனம் நிறுத்துவதற்கான பகுதியாகும். ஆகவே குழந்தை களும், பொதுமக்களும் நடந்து செல்வதற்கும், வாக னங்களை நிறுத்துவதற்கும் தடை ஏற்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    இந்நிலையில் மாநகரத்திற்குள் மழை நீர்வராமல் இருக்க புற வழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி களையும், மழையினால் அதிக நீர் தேங்கும் பகுதிகளான முத்தம்மாள் காலனி, கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மழைநீர் வரும் புறநகர் பகுதிகளையும், சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித்தடத்தையும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அதிகாரி களிடம் நீர்வழி தடங்களை தூர் வரவும்,குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தவும், உத்தர விட்டார். ஆய்வின் போது மாநகர அதிகாரிகள், அலு வலர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×