என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிற்சி கூட்டத்தில் தி.மு.க. செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா பேசிய காட்சி. அருகில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் உள்ளார்
ஆலங்குளத்தில் தி.மு.க. பயிற்சி பாசறை கூட்டம்
- ஆலங்குளத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். ராஜா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன், தி.மு.க. செய்தித் தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா ஆகியோர் இளைஞரணியினருக்குப் பயிற்சி அளித்தனர்.
கூட்டத்தில் ஆலங்குளம் நகர செயலர் நெல்சன், ஒன்றிய செயலர் செல்லதுரை,மாவட்ட பிரதிநிதி அன்பழகன், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணை செயலர் அருணன் மற்றும் திரளான இளைஞரணி நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ஆறுமுகச் சாமி வரவேற்றார். கீழப்பாவூர் ஒன்றிய இளைஞரணி பொறுப்பா ளர் கோமு நன்றி கூறினார்.






