search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கட்சி தி.மு.க.- குன்னூரில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
    X

    75 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கட்சி தி.மு.க.- குன்னூரில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

    • நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தமான சின்னம் இல்லை என்று தகவல்
    • அ.தி.மு.க.வின் தற்போதைய சின்னமும் வரும் தேர்தலில் இருக்குமா, இருக்காதா என்று கேள்வி

    குன்னூர்,

    குன்னூர் வி.பி.தெரு, கலைஞர் திடலில் நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. குன்னூர் நகர தி.மு.க செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமை தாங்கினார் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர் கான் வரவேற்றார். நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா. முபாரக் முன்னிலை வகித்தார்.

    பொதுக்கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தமான சின்னம் இல்லை என்பது வரலாறு. கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 75 ஆண்டுகளாக பவள விழா காணும் வகையில், தி.மு.க கட்சி ஒரே சின்னத்தில் இன்று வரை உதயசூரியன் சின்னத்தில் மட்டும் போட்டியிட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி கூட முன்பு ரெட்டைகாளை பசுக்கன்று, கை ராட்டையில் போட்டியிட்டது. தற்போது கை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல அ.தி.மு.க.வும் பல சின்னங்கள் மாறி உள்ளது.

    இரட்டைப்புறா, சேவல் மற்றும் ஜெயலலிதா இறந்தவுடன் குக்கர் மற்றும் பல்வேறு பிரிவாக அந்த கட்சியின் சின்னங்கள் மாறி உள்ளன. ஆனால் 75 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்துடன் போட்டியிடும் நாட்டின் ஒரே கட்சி தி.மு.க மட்டும் தான். அன்று முதல் இன்று வரை ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறோம். அ.தி.மு.க.வின் தற்போதைய சின்னமும் வரும் தேர்தலில் இருக்குமா, இருக்காதா என்று தெரியவில்லை. ஆகையால் எந்தக் கட்சிக்கும் இல்லாத ஒரு நிலைப்பாடு தி.மு.க.வுக்கு மட்டும் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ரவி, மாநில விளையாட்டு மேம்பாட்டுதுறை துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணைத்தலை வருமான வாசிம்ராஜா. குன்னூர் நகரமன்ற தலை வர் ஷீலா கேத்தரின், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×