என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் தி.மு.க. பொதுக்கூட்டம்
- பொதுக்கூட்டம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில் நடைபெற்றது.
- கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தங்கமணி ஏற்பாட்டின் பேரில் 1000 பெண்களுக்கு இலவச புடவை வழங்கப்பட்டது
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்று பேசினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன், நகர அவைத் தலைவர் அழகுவேல், நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, நகர பொருளாளர் சம்மந்தம், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெகன், பாண்டியன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் குடியாத்தம் குமரன், தருமபுரி அதியமான் ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசு நிறைவேற்று வரும் திட்டங்கள் குறித்தும், தி.மு.க. அரசு செய்து வரும் சாதனைகள் குறித்தும் விலக்கி பேசினர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தங்கமணி ஏற்பாட்டின் பேரில் 1000 பெண்களுக்கு இலவச புடவை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ரேணுகாதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சரஸ்வதி துரைசாமி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், செல்வராஜ், சேட்டு, வைகுந்தம், மல்லமுத்து, கருணாநிதி, சபரிநாதன், மடம்முருகேசன், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கவுதம், முத்துலட்சுமி, பொன்மகேஸ்வரன், ராஜா, ரவி, காசிநாதன், ரஹீம், குமார், நிர்வாகி எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி கவுன்சிலர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.






