search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னாளபட்டியில் தலைவர், துணைத்தலைவரை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா
    X

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை படத்தில் காணலாம்.

    சின்னாளபட்டியில் தலைவர், துணைத்தலைவரை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா

    • பேரூராட்சி ஊழியர் உங்களை யார் இந்த புத்தகத்தை பார்க்க சொன்னது என கூறி பறித்துச் சென்றார்.
    • இதனால் ஆத்திரம் அடைந்த உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் தலைவராக பிரதீபா, துணை த்தலைவராக ஆனந்தி ஆகியோர் உள்ளனர்.

    மொத்தம் உள்ள 18 வார்டுகளில் அனைவரும் தி.மு.க. உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருடத்தின் கடைசி பேரூராட்சி கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி காலை 11 மணி முதல் கவுன்சிலர்கள் வரத்தொடங்கினர். ஆனால் 12 மணி வரை தலைவர், துணைத்தலைவர் என யாரும் வரவில்லை. இதனையடுத்து உறுப்பினர்கள் அஜெண்டா புத்தகத்தில் என்ன தீர்மானங்கள் உள்ளது என பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பேரூராட்சி ஊழியர் உங்களை யார் இந்த புத்தகத்தை பார்க்க சொன்னது என கூறி பறித்துச் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கூட்டம் நடைபெறும் என அறிவித்து விட்டு தலைவர் மற்றும் துணைத்தலைவரே வராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.

    பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் கவுன்சிலர்கள் சமாதானம் அடையவில்ைல. கூட்டத்தை நடத்துவது குறித்து தனக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. தலைவர் மற்றும் துணைத்தலைவரே முடிவு செய்வார்கள்.

    எனவே போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து 10 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தி.மு.க. சேர்மன் மற்றும் துணைத்தலைவரை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×