என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் தே.மு.தி.க-வினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தேனியில் தே.மு.தி.க-வினர் ஆர்ப்பாட்டம்

    • தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மின் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

    தேனி:

    தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    தேனி நகர செயலாளர் முருகராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மாயி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க தேர்தல் பணிக்குழு செயலாளரும், தேனி மாவட்ட உட்கட்சி தேர்தல் ஆணையாளருமான தாமோதரகண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

    Next Story
    ×