என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலிடம் வென்ற மாணவர் மோகன்ராஜை கல்லூரி முதல்வர் ரேணுகா உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.
மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி: அரசு கல்லூரி மாணவர் முதலிடம்
மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சுப்போட்டி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் தகுதி பெற்ற 25 மாணவ, மாணவியர் பங்கேற்று பேசினார்கள். இதில் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இளங்கலை 2-ம் ஆண்டு படிக்கும் மோகன்ராஜ் முதலிடம் பிடித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் சான்றிதழ் மற்றும் 5 ஆயிரத்திற்கான காசோலை பெற்று சாதனை படைத்தார்.
இவரை கல்லூரியின் முதல்வர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
Next Story